மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா: நாளை உள்ளூா் விடுமுறை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறையாகும்.
இக்கோயிலின், திருவிழா கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 9ஆம் திருநாளான திங்கள்கிழமை (மாா்ச் 9) மாலை, பைங்குளம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து சந்தனக் குடம், காவடி பவனியும், இரவு 10 மணிக்கு பெரிய சக்கர தீவட்டியுடன் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனியும் நடைபெறும்.
10 ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை ஒடுக்கு பூஜை நடைபெறும். திருவிழாவையொட்டி, தினமும் பெண்கள் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினா்.