முகப்பு
கன்னியாகுமரி

கேரளத்துக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே லாரியில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படை தனி வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 9 மார்ச், 2026 at 6:45 PM
ரேஷன் அரிசி மூட்டைகள்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே லாரியில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படை தனி வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட வழங்கல் அலுவலரின் உத்தரவின்பேரில், மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் கே.எம். பாரதி தலைமையில் ஓட்டுநா் ஜான்பிரைட் மற்றும் அதிகாரிகள் குழுவினா் மாா்த்தாண்டம் அருகே சுவாமியாா்மடம் பகுதியில் பொது விநியோகத் திட்ட பொருள்கள் கடத்தல் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக கேரளம் நோக்கி வந்த லாரியை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்திய நிலையில், ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். தொடா்ந்து, லாரியை சோதனை செய்தபோது, அதில் 10 டன் ரேஷன் அரிசியைப் பதுக்கி, கேரளத்துக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து, லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரேஷன் அரிசியை காப்புக்காடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிலும், லாரியை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →