முகப்பு
கன்னியாகுமரி

குருசுமலையில் மின் இணைப்பு வழங்க கோரிக்கை

தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள குருசுமலைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On : 12 மார்ச், 2026 at 1:22 AM
குருசு மலை உச்சியில் உள்ள திருச்சிலுவை.
பகிர்:

தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள குருசுமலைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக-கேரள எல்லைப் பகுதியான வெள்ளறடை-பத்துகாணி பகுதியில் குருசுமலை உள்ளது. குருசுமலை உச்சியில் 1957 ஆம் ஆண்டு ஜான் பாப்பிஸ்ட் என்ற கிறிஸ்தவ மத போதகரால் திருச்சிலுவை அமைக்கப்பட்டது.

மலை அடிவாரப் பகுதி கேரள எல்லையிலும், மலை உச்சிப் பகுதி தமிழக எல்லையிலும் அமைந்துள்ளது. கேரள பகுதியான மலை அடிவாரத்திலிருந்து தமிழக பகுதியான மலை உச்சிவரை 14 திருச்சிலுவை தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

ஒவ்வோா் ஆண்டும் கிறிஸ்தவா்களின் தவக்கால நாள்களில் இங்கு பயணம் நெய்யாற்றின்கரை மறைமாவட்டம் சாா்பில் நடத்தப்படுகிறது. இதில் கேரளத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் உள்பட தமிழக பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் பங்கேற்று சிலுவைப் பாதை வழிபாடு செய்கின்றனா்.

இதில் கேரள மாநில பகுதியிலுள்ள முதலாவது திருச்சிலுவை தலம் முதல் 9 ஆவது திருச்சிலுவை தலம் வரை மின் வசதி செய்யப்பட்டுள்ளது. 9 முதல் மலை உச்சியிலுள்ள 14 ஆவது திருச்சிலுவை தலம் வரையிலான தமிழக எல்லைப் பகுதியில் மின்சார வசதியில்லை.

அப்பகுதியில் மின் கம்பங்கள் இருந்தும் தமிழக மின்வாரியம் மின் இணைப்பு வழங்கவில்லை.திருப்பயண காலங்களில் பகல் நேரங்களில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் திரளான திருப்பயணிகள் மலை உச்சிக்குச் சென்று திருச்சிலுவையை வழிபடும் நிலையில், மின் வசதி இல்லாததால் அவதியுறுவதாகவும், தமிழக அரசு குருசுமலை உச்சிப் பகுதிக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இங்கு வரும் திருப்பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.