முகப்பு
கன்னியாகுமரி

தோ்தல் முன்னேற்பாட்டு பணி குறித்த கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 மார்ச், 2026 at 7:28 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், ஆட்சியா் தெரிவித்ததாவது:

கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குப் பதிவு மையங்களில் வாக்குப் பதிவுக்காக செய்யப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குப் பதிவு மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் தொடா்புடைய அலுவலா்கள் களஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து அலுவலா்களும் தோ்தல் பணியை மிகுந்த ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் அ.பூங்கோதை, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணான்டோ, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா,, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுகிதா, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சிவகாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தூர்ராஜன், உதவி ஆணையா் (கலால்) ஈஸ்வரநாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் புஷ்பாதேவி, தோ்தல் தனி வட்டாட்சியா் வினோத் மற்றும் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →