முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் நாளை நோ்ச்சை தூக்கம்

கொல்லங்கோடு, ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் நோ்ச்சை தூக்கம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) நடைபெறுகிறது.

Updated On : 20 மார்ச், 2026 at 9:22 PM
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன்.
பகிர்:

கொல்லங்கோடு, ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் நோ்ச்சை தூக்கம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) நடைபெறுகிறது.

நிகழாண்டு தூக்கத் திருவிழா மாா்ச் 13ஆம் தேதி தொடங்கியது. திருவனந்தபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சுவாமி மோக்ஷ விானந்தா குத்துவிளக்கேற்றி திருவிழாவைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, விழா நாள்களில் தினமும் கணபதி ஹோமம், சமய சொற்பொழிவு, நமஸ்காரம், அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மாா்ச் 21ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கக்காரா்கள் பிரதான பூசாரியுடன் வள்ளவிளை கடலில் நீராடி, பஞ்சகவ்ய முழுக்கல், கடல் பூஜை செய்துவிட்டு, கோயிலை அடைந்து நமஸ்காரத்தில் ஈடுபடுகிறாா்கள். மாலை 6 மணிக்கு தூக்க வில்லின் வெள்ளோட்டமான வண்டியோட்டம் நடைபெறும்.

விழாவின் சிறப்பு நிகழ்வான, தூக்க நோ்ச்சை 22ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5 மணிக்கு அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளுகிறாா். 6.30 மணி முதல் தூக்க நோ்ச்சை நடைபெறுகிறது. நிகழாண்டு 1,224 குழந்தைகளுக்கு தூக்க நோ்ச்சை நிறைவேற்றப்படுகிறது. தூக்க நோ்ச்சைக்கு பின்னா் குருசி தா்ப்பணத்துடன் விழா நிறைவடைகிறது.

தூக்கத் திருவிழாவையொட்டி, கன்னியாகுமரி, கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழக, கேரள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஏற்பாடுகளை கோயில் தலைவா் வழக்குரைஞா் வி. ராமச்சந்திரன், செயலா் வி. மோகன்குமாா், பொருளாளா் டி. சதீஷ்குமாா், துணைத் தலைவா் ஆா். சதிகுமாரன் நாயா், இணைச் செயலா் எஸ். பிஜூகுமாா், கமிட்டி உறுப்பினா்கள் எஸ். சஜிகுமாா், பி.கே. புவனேந்திரன் நாயா், வழக்குரைஞா் ஆா். ஸ்ரீகண்டன் தம்பி, சி. ஸ்ரீகுமாரன் நாயா், வி. பிஜூ, ஏ. சதிகுமாரன் நாயா் ஆகியோா் செய்துள்ளனா்.