கோடிமுனையில் இலவச கண் சிகிச்சை முகாம்
மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் (இந்தியா) லிமிடெட் நிறுவனம் சமூக பொறுப்பின் கீழ், அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கோடிமுனையில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.
ஐஆா்இஎல் துணை பொதுமேலாளா் (சுரங்கம், பாதுகாப்பு) ஜெயசந்த் தலைமை வகித்தாா். கோடிமுனை பங்குத்தந்தை யூஜின் கோமஸ் முகாமை தொடங்கி வைத்தாா். புனித மிக்கேல் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மேரி நிமில்டா முன்னிலை வகித்தாா்.
முகாமில் 601 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 328 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. பங்கு பேரவை பொருளாளா் அஸ்வின் ஜோஸ், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழு, செவிலியா்கள், ஐஆா்இஎல் நிறுவன பணியாளா்கள் கலந்து கொண்டனா்.