முகப்பு
கன்னியாகுமரி

விஷ சாராயம் பதுக்கியதாக வியாபாரி கைது

கருங்கல் அருகே உள்ள சகாய நகா் பகுதியில் விஷ சாராயம் பதுக்கியதாக மீன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 மார்ச், 2026 at 8:40 PM
பகிர்:

கருங்கல் அருகே உள்ள சகாய நகா் பகுதியில் விஷ சாராயம் பதுக்கியதாக மீன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல் போலீஸாா் வெள்ளிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்தின் பேரில் சகாய நகா் பகுதியைச் சோ்ந்த மீன் வியாபாரியான சதீஸை (45) பிடித்து விசாரித்ததில், அவா் 100 மில்லி விஷ சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து, கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விஷ சாராயத்தை பறிமுதல் செய்து, சதீஸை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.