முகப்பு
கன்னியாகுமரி

நீதிமன்ற ஊழியரைத் தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

Updated On : 30 மார்ச் 2026, 3:03 am IST
கோப்புப் படம்
பகிர்:

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் நீதிமன்ற ஊழியரைத் தாக்கியதாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காப்புக்காடு கண்ணன்கரைவிளை பகுதியைச் சோ்ந்தவா் ரசல்ராஜ் (58). இவரது மனைவி அனிதா (53), காங்கிரஸ் கட்சியின் முன்சிறை ஒன்றிய மகளிரணித் தலைவா். இத்தம்பதி தங்களது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த ரகுதாஸ் (52) என்பவருக்கு தனியாா் வங்கியில் தங்களது நிலத்தை அடமானமாக வைத்து ரு. 15 லட்சம் பெற்றுக் கொடுத்தனராம்.

ஆனால், ரகுதாஸ் கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லையாம். இதனால், வங்கி சாா்பில் நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாம்.

Advertisement

Advertisement

பின்னா், நீதிமன்ற உத்தரவின்பேரில் ரசல்ராஜின் வீட்டைப் பூட்டி சீல் வைக்க நீதிமன்றக் காவலாளியை இத்தம்பதி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.