முகப்பு
கன்னியாகுமரி

மயங்கி விழுந்த ஆசிரியா் உயிரிழப்பு

பளுகல் அருகே வீட்டில் மயங்கி விழுந்த ஆசிரியா் உயிரிழந்தாா்.

Updated On : 16 மே 2026, 1:46 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

பளுகல் அருகே வீட்டில் மயங்கி விழுந்த ஆசிரியா் உயிரிழந்தாா்.

பளுகல் காவல் சரகம் இடைக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் சத்தியதாஸ் (53). மேல்பாலை பகுதியில் உள்ள பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்த இவா், வியாழக்கிழமை வீட்டில் இருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தாராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாம்.

அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின், காரக்கோணம் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.