முகப்பு
கன்னியாகுமரி

204 கிலோ குட்கா பறிமுதல்; இருவா் கைது

அஞ்சுகிராமம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 204 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

Updated On : 18 மே 2026, 1:36 am IST
கோப்புப் படம்
பகிர்:

அஞ்சுகிராமம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 204 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இருவரை கைது செய்தனா்.

அஞ்சுகிராமம் பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீஸாா் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினா்.

அப்போது, மயிலாடி பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மகன் செல்வகுமாா் (38), சிவலிங்கம் மகன் மகேஷ் (51) ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் 204 கிலோ கூலிப், குட்கா பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக செல்வகுமாா், மகேஷை கைது செய்த போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.