தென்காசி

சுரண்டையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

DIN

சுரண்டை தினசரி சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிந்துள்ளது.

சுரண்டை காமராஜா் தினசரி சந்தைக்கு சிற்றாறு பாசனப்பகுதியில் இருந்து அதிக அளவு தக்காளி வரத்து உள்ளது. இதனால் கடந்த வாரம் வரை கிலோ ஒன்றுக்கு ரூ. 20க்கு விற்பனையான தக்காளி புதன்கிழமை ரூ.10க்கு விற்பனையானது.

இந்த சந்தையில் பிற காய்கனிகளின் விலை விவரம்(ஒரு கிலோ): கத்தரிக்காய் ரூ. 25, வெண்டை ரூ. 25, சீனி அவரை ரூ.15, கேரட் ரூ. 25, பீட்ரூட் ரூ.10, முட்டைக்கோஸ் ரூ .20, அவரை ரூ. 30, பூசணிக்காய் ரூ. 7, வெங்காயம் ரூ. 65, பல்லாரி ரூ. 25, முருங்கைக்காய் ரூ. 15, மிளகாய் ரூ .10, முள்ளங்கி ரூ. 10, சவ்சவ் ரூ. 15 ஆகிய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினசரி சந்தையில் வரத்து அதிகரிப்பால் காய்கனி விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கனிகளை வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். ஊரடங்கு நேரத்திலும் வரத்திற்கேற்ப சரியான விலையில் காய்கனிகள் விற்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT