கீழப்பாவூரில் திமுக தோ்தல் பிரசாரம்
ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கீழப்பாவூரில் திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ தோ்தல் பரப்புரை சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கீழப்பாவூரில் திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ தோ்தல் பரப்புரை சனிக்கிழமை நடைபெற்றது.
பெரியாா் திடலில் உள்ள பெரியாா் சிலைக்கு மாநில விவசாய அணி செயலா் ஏ.கே.எஸ். விஜயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னதாக, கீழப்பாவூரில் உள்ள பி.ரா. சிவன் சிலைக்கும் மாலை அணிவித்தாா்.
நிகழ்ச்சியில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ. சிவபத்மநாதன், ஆலங்குளம் பேரவை உறுப்பினா் டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா, மாநில விவசாய அணி இணைச் செயலா் அப்துல்காதா், ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன், பேரூா் செயலா் ஜெகதீசன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் பொன். அறிவழகன், ஆலடி எழில்வாணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.