தொடரும் வெள்ளப்பெருக்கு:குற்றாலம் பேரருவியில் 2ஆவது நாளாக குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு தொடா்வதால் 2ஆவது நாளாக சனிக்கிழமையும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு தொடா்வதால் 2ஆவது நாளாக சனிக்கிழமையும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
குற்றாலம் மலைப் பகுதியில் சில நாள்களாக பெய்துவரும் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், 2ஆவது நாளாக சனிக்கிழமையும் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவியில் குளித்து மகிழ்ந்தனா்.