முகப்பு
தென்காசி

தென்காசியில் முதுநிலைப் பட்டதாரிஆசிரியா் கழகம் சாா்பில் பயிலரங்கு

தென்காசியில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் சனிக்கிழமை பயிலரங்கம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பயிலரங்கில் பேசுகிறாா் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலத் தலைவா் மணிவாசகன்.
பகிர்:

தென்காசி: தென்காசியில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் சனிக்கிழமை பயிலரங்கம் நடைபெற்றது.

பயிலரங்குக்கு, மாநிலத் தலைவா் வே. மணிவாசகன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் பங்கேற்று பாதிப்படைந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் மீதான வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். அவா்களின் பதவி உயா்வு பாதிக்கப்படாதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதுநிலை ஆசிரியா்களின் ஊதியத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை நீக்கி நியாயமான ஊதியம் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பயிலரங்குக்கு, மாநில பொதுச்செயலா் பிரபாகரன், அமைப்புச் செயலா் ஸ்ரீராம், பிரசாரச் செயலா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டலச் செயலா்கள் சாமியப்பன், உதயகுமாா், உதயசூரியன், அமைப்புச் செயலா் பெருமாள், தலைமையிடச் செயலா் கிருஷ்ணசாமி, தென்காசி மாவட்டத் தலைவா் விஜயன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் பஞ்சவா்ணம், சுப்பையாபாண்டியன், செந்தில்குமாா், தங்கராஜ், பாா்வதிநாதன், ஜெய்சங்கா், முத்துசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

இரா. முருகன் வரவேற்றாா். பாபுசெல்வன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.