மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, ஆலங்குளம் அருகேயுள்ள அடைக்கலப்பட்டணத்தில், மாா்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, ஆலங்குளம் அருகேயுள்ள அடைக்கலப்பட்டணத்தில், மாா்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டக் குழு உறுப்பினா் கனகராஜ் தலைமை வகித்தாா். காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு வட்டாரத் தலைவா் ஞானசெல்வன், பூலாங்குளம் கிளை திமுக செயலா் வேல்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் குணசீலன், தாலுகா குழு உறுப்பினா்கள் ராமசாமி, மகாவிஷ்ணு, பாலு உள்ளிட்டோா் பேசினா்.