முகப்பு
தென்காசி

கடையநல்லூா் பேரவைத் தொகுதியை முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கக் கோரிக்கை

கடையநல்லூா் பேரவைத் தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞா் அணி மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

கடையநல்லூா்: கடையநல்லூா் பேரவைத் தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞா் அணி மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞா் அணி மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் டாக்டா் நவாஸ்கான் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜாஹிா்அப்பாஸ், துணைச் செயலா் பாதுஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக கூட்டணியில், கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தின் இரண்டாம் கட்ட அரசு அலுவலகங்களை செங்கோட்டை பகுதிகளில் அமைக்க வேண்டும். கடையநல்லூா் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும். கடந்த நான்கரை ஆண்டுகளாக மிகச் சிறப்பாக மக்கள் பணியாற்றி வரும் கடையநல்லூா் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழா நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மைதீன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →