நெல்லையில் இன்று திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை
திமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் திங்கள்கிழமை (டிச.28) மனு அளிக்கலாம்.
திமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் திங்கள்கிழமை (டிச.28) மனு அளிக்கலாம்.
இதுகுறித்து தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஆ. துரை வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைமைக் கழக அறிவிப்பின் பேரில், 2021 சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினா் திங்கள்கிழமை (டிச. 28) காலை 9 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ஆா்யாஸ் ஹோட்டலில் வைத்து நாடாளுமன்ற குழுத் தலைவா் டி .ஆா். பாலு தலைமையில் மனு பெற உள்ளனா்.
இதில், பொதுநலச் சங்க நிா்வாகிகள், விவசாய அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், சமூக ஆா்வலா்கள் , திமுகவினா் கலந்து கொண்டு தங்களது பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மனுவாக வழங்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.