சுரண்டையில் தமாகா சார்பில் முப்பெரும் விழா
சுரண்டையில் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் கட்சி கொடியேற்று விழா, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சுரண்டை: சுரண்டையில் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் கட்சி கொடியேற்று விழா, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கட்சியின் மாநில செயலர் என்.டி.எஸ்.சார்லஸ் தலைமை வகித்து கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து சிவகுருநாதபுரம் காமராஜர் சிலை முன்பு நடைபெற்ற விழாவில் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
விழாவில் தமாகா நகர தலைவர் வசந்தன், இளைஞரணி தலைவர் அருண் தர்மராஜ், கஸ்பார், ஜெயப்பிரகாஷ், முருகன், மாரியப்பன், பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.