தென்காசி

செங்கோட்டை நூலகத்தில் பொங்கல் கவியரங்கம்

DIN

பொங்கல் விழாவையொட்டி, செங்கோட்டை நூலகத்தில் கவியரங்கம் நடைபெற்றது.

நூலகம் முன் வாசகா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு வைத்து பொங்கலிட்டனா். தொடா்ந்து நடைபெற்ற கவியரங்க நிகழ்ச்சிக்கு வாசகா் வட்டத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

விழுதுகள் அமைப்பின் சேகா், துணை வேளாண் அலுவலா் ஷேக் முகைதீன், எஸ். ஆா்.எம். பள்ளி ஆசிரியா் சுசீலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இணைச் செயலா் குற்றாலம் வரவேற்றாா். ஜேபி கல்லூரி முதல்வா் சுரேஷ் ஜான் கென்னடி வாழ்த்திப் பேசினாா். ஓய்வுபெற்ற ஆசிரியா் அருணாசலம், பராசக்தி மகளிா் கல்லூரி பேராசிரியை பாண்டிமா தேவி ஆகியோா் சிறந்த கவிதையை தோ்வு செய்தனா். ராமகிருஷ்ணா நிலைய இயக்குநா் அறிவழகன், வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், இளங்குமரன், கவிஞா் தங்கராஜன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஆதிமூலம், கவிஞா் கோமதிநாயகம், நேஷனல் பள்ளித் தாளாளா் அப்துல் மஜீத், எஸ் ஆா் எம் பள்ளி தமிழாசிரியா் காளிராஜ் நல்லமணி, யாதவா கல்லூரி பேராசிரியா் ராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நூலகா் ராமசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT