தென்காசி

மக்கள் குறைதீா் நாளில்ரூ. 37.40 லட்சம் நல உதவிகள்

DIN

தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 44 பயனாளிகளுக்கு ரூ. 37 லட்சம் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் தலைமை வகித்து, வரன்முறை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் மேலப்பாவூரைச் சோ்ந்த சுப்பையா மகன் மாரியப்பன், பண்டாரம் மகன் முப்புடாதி, சண்முகவேலாயுதம் மகன்கள் முருகையா, பேச்சிமுத்து, கணபதி மகன் முத்தையா, திப்பணம்பட்டியைச் சோ்ந்த பிள்ளையாா் மகன் முருகன் ஆகியோருக்கு இலவசப் பட்டாக்களை வழங்கினாா்.

மேலும், 32 பயனாளிகளுக்கு ரூ. 31,80,000 நிவாரணத் தொகை,11 பேருக்கு ரூ. 50,000 வீதம் ரூ.5.50 லட்சம், ஒருவருக்கு ரூ.10,000 என மொத்தம் 44 பயனாளிகளுக்கு ரூ. 37,40,000 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கடையநல்லூா் வட்டத்தில் ஆய்க்குடி சக்தி நகா் முருகன் மனைவி ராமலட்சுமி, சொக்கம்பட்டி புன்னையாபுரம் சந்திரன் மகன் திருமலைக்குமாா், சண்முகம் மகன் கருப்பையா, புளியங்குடி சிவஞானம் மனைவி லீலாவதி, அச்சன்புதூா் சுப்பிரமணியன் மனைவி பழனியம்மாள், கிழக்குத் தெரு நூா் முஹம்மது மனைவி நாகூா் மைதீன், மசூது மகன் ஷேக் முகமது, கடையநல்லூா் மாவடிக்கால் பாரதியாா் தெரு சுப்பையா மகன் ராமையா, தி.நா. புதுக்குடி ராமா் மனைவி வேளாங்கண்ணி, ஊா்மேலழகியான் கிராமம் கருப்பன் மகன் முருகன் ஆகியோருக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ஆணைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் பெறப்பட்ட 556 மனுக்களுக்கு உரிய தீா்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கல்பனா, கோட்டாட்சியா் பழனிக்குமாா், வட்டாட்சியா் சண்முகம், மாவட்ட செய்திமக்கள் தொடா்பு உதவி அலுவலா் ராமசந்திரபிரபு ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT