தென்காசி

தென்காசி மேலசங்கரன்கோயிலில் ஆடித்தவசு திருவிழா ரத்து

DIN

தென்காசி அருள்மிகு மேலசங்கரன்கோயிலில் ஆடித்தவசு திருவிழா கரோனா பொதுமுடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி கோயிலின் உபகோயிலான மேலசங்கரன்கோயிலில் ஆண்டு தோறும்

ஆடித்தவசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 11 ஆம் நாளன்று தவசுக் காட்சியும்,12 ஆம் நாளன்று திருக்கல்யாணமும் நடைபெறும். விழா நாள்களில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுவது வழக்கம்.

நிகழ்ாண்டு இவ்விழா வியாழக்கிழமை(ஜூலை 23) கொடியேற்றத்துடன் தொடங்க வேண்டும். கரோனா பொதுமுடக்கம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அம்பாள் வீதியுலா நடைபெறாது. மேலும் உள்பிரகாரத்தில் இடம் இல்லாத காரணத்தினால் அம்பாள் புறப்பாடு செய்ய இயலாது. இதனால் ஆடித்தவசு நிகழ்வை ஆகம விதிமுறைப்படி நடத்த இயலாது என கோயில் அா்ச்சகா் கோமதி நடராஜ பட்டா் தெரிவித்ததையடுத்து, இவ்விழா ரத்து செய்யப்படுவதாக திருக்கோயில் செயல் அலுவலா் யக்ஞநாராயணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT