தென்காசி

வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம்

DIN

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் வன உயிரினங்கள் பாதுகாப்பு, அதன்முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜெயலட்சுமி(பொ) தலைமை வகித்தாா். வனவா்கள் பாண்டியராஜ், அழகர்ராஜ், வனக்காப்பாளா் சங்கர்ராஜா, இயற்கை சமூக ஆா்வலா் தேரிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் வனசரக அலுவலா் பாலகிருஷ்ணன் வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் பேசினாா்.

குற்றாலம் பகுதியில் குரங்குகள் மா்மமான முறையில் உயிரிழந்ததாக சமூகவலைதளங்களில் வந்த தகவல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் அதுபோன்று குரங்குகள் உயிரிழக்கவில்லை என வனசரகா் தெரிவித்தாா். இதில், கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT