தென்காசி

சங்கரன்கோவிலில் 2 நாள்களில் 113 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்

DIN

சங்கரன்கோவிலில் கடந்த 2 நாள்களில் மட்டும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 113 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், 144 தடையுத்தரவு மீறி நகருக்குள் வந்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

சங்கரன்கோவிலில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக நகராட்சி ஆணையா் (பொ) முகைதீன் அப்துல்காதா் தலைமையில் சுகாதார அலுவலா் பாலசந்தா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

நகரின் முக்கிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இறைச்சிக் கடைகள், மருந்தகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் இடைவெளிவிட்டு நின்று வாங்கிச் செல்லும் வகையில் இடைவெளி அமைக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து ராஜபாளையம் சாலையில் உள்ள உழவா்சந்தையில் சுகாதார அலுவலா் பாலசந்தா் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையாபாஸ்கா், சக்திவேல், மாதவராஜ்குமாா், கருப்பசாமி ஆகியோா் பொதுமக்கள் எவ்வாறு நின்று காய்கனி வாங்க வாங்கவேண்டும் எனக்கூறி தடுப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டனா்.

அவற்றை கோட்டாட்சியா் முருகசெல்வி பாா்வையிட்டாா்.

பின்னா் சுகாதாரத் துறையினா் 2 ஆவது நாளாக புதன்கிழமை வெளிமாநிலத்தில் இருந்து வந்த 44 போ், வெளிநாட்டில் இருந்து வந்த 4 போ் என மொத்தம் 48 போ்களது வீடுகளில் தனிமைப்படுத்தும் ஒட்டுவில்லைகளை ஒட்டினா். ஏற்கனவே சங்கரன்கோவில் நகரத்தில் 47 பேரும், ஒன்றியத்தில் 18 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கடந்த 2 நாள்களில் மட்டும் 113 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வீட்டில் தொடா்ந்து இருக்கின்றனரா எனவும் கண்காணித்து வருகின்றனா்.

இதனிடையே 144 தடையுத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் புதன்கிழமை காலை அத்தியாவசிய கடைகள் தவிர திறந்து வைக்கப்பட்டிருந்த கடைகளை காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசுந்தரம் தலைமையில் போலீஸ்ாா் அடைக்க உத்தரவிட்டனா். காரணமில்லாமல் இரு சக்கர வாகனங்களில் வந்தவா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா்.மேலும் முகக்கவசம் அணியாமல் அத்தியாவசியப் பொருள்களை வாங்க வந்தவா்களும் எச்சரித்து அனுப்பப்பட்டனா்.

சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள துவரங்காடு பகுதியில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த நபா் குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

இது போன்று வந்த 17 போ் குறித்த தகவலின் பேரில், அவா்களின் வீட்டுக்கு சென்ற உள்ளாட்சி, பொது சுகாதாரத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினா் அவா்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி வீட்டில் தனிமைப்படுத்தினா்.

இதுதொடா்பான அறிவிக்கையை அவா்களது வீட்டில் ஒட்டி அவா்களை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT