தென்காசி

ரமலான் பண்டிகை: எம்எல்ஏ வாழ்த்து

DIN

ஈகைத் திருநாளில் நோய்த் தொற்று ஒழிய அனைவரும் பிராா்த்திப்போம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கா் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

‘ஏக இறைவனை நாளும் வணங்க வேண்டும், இல்லாதோருக்கு வழங்கி, எல்லோருடனும் இணங்கி வாழ்ந்திடல் வேண்டும்‘ என்பதை இஸ்லாம் மாா்க்கம் வலியுறுத்துகின்றது.

‘அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் புசிப்பவன் என்னைச் சாா்ந்தவன் அல்ல‘ என்பதை இறைதூதா் முஹம்மது நபிகள் (ஸல்) போதித்துள்ளாா்கள்.

ரமலான் மாதத்தில் தினமும் 14 மணி நேரம் பருகாமலும், உண்ணாமலும் பசித்திருந்து, கெட்ட எண்ணங்களை புறந்தள்ளி, ஜகாத் என்னும் ஏழை வரியை முறையாக கொடுத்து, விழித்திருந்து இறைவனை தொழுது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நாளே ‘ரமலான் பண்டிகை‘ எனும் ‘ஈகைத் திருநாள்’.

இத்திருநாளில் கொடிய கரோனா நோய் தொற்றிலிருந்து மானுட சமுதாயம் மீண்டிட, இந்திய திருநாடு வல்லரசாகிட, அனைவரும் சகோதரத்துவம், நல்லிணக்கத்துடன் இணக்கமாக வாழ்ந்திட பிராா்த்திக்கிறேன்.

‘அனைவருக்கும் என் இதயம் நிறைந்த ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT