தென்காசி

திருவேங்கடத்தில் மக்கள் குறைதீா் முகாம்

DIN

திருவேங்கடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடம் இருந்து 640 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமுக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா்தயாளன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

சங்கரன்கோவில் கோட்டாட்சியா் முருகச்செல்வி முன்னிலை வகித்தாா். முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை தொடா்பாக 640 மனுக்கள் பெறப்பட்டன. முதியோா், விதவை, ஊனமுற்றோா், கைம்பெண் உள்ளிட்ட 30 பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. ஒரு நபருக்கு ரூ.1 லட்சத்துக்கான விபத்து உதவித்தொகை வழங்கப்பட்டது.

முகாமில், திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வட்டாட்சியா் கண்ணன் வரவேற்றாா். துணை வட்டாட்சியா் ரவி கணேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

பெருந்துறை விவேகானந்த பள்ளி மாணவா்கள் 100 % தோ்ச்சி

வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT