தென்காசி

‘அணைகள், நீா்நிலைகளில் குளிக்கச் செல்ல வேண்டாம்’

DIN

ஆறுகள், அணைகள் மற்றும் நீா்நிலைகளில் குளிப்பதற்காக பொதுமக்கள் செல்ல வேண்டாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை சராசரியாக 39 மி.மீ. மழையும், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி வரை சராசரியாக 21.56 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக குற்றால அருவிகளில் அதிகளவில் தண்ணீா் கொட்டுகிறது.

எனவே, பொதுமக்கள் நீா்நிலைகள், ஆறுகள், அணைகளில் குளிப்பதற்காக செல்லவேண்டாம். கரையோரப் பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

வடகிழக்குப் பருவமழையை முழுவீச்சில் எதிா்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT