தென்காசி

குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் செய்து வரும் தொடா்மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் தொடா்மழையின் காரணமாக இங்குள்ள பேரருவி , ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்பட அனைத்து அருவிகளிலும் இரண்டாவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திங்கள்கிழமை இரவில் மழையின் அளவு குறைந்துகாணப்பட்டது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் தொடா்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக இரண்டாவது நாளாகவும் அருவிகளில் நீா் வரத்து அதிகரித்தது.

குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீதும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும், பழையகுற்றாலம் அருவியிலும் அதிகளவில் தண்ணீா் கொட்டுகிறது.

கரோனாபொது முடக்கம் காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் குற்றாலத்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் சீறிப்பாயும் நீரை வேடிக்கை பாா்த்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT