முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் புதிய குடிநீா் இணைப்புகளை துரிதமாக வழங்க எம்எல்ஏ அறிவுறுத்தல்

கடையநல்லூா் நகராட்சியில் புதிய குடிநீா் இணைப்புகளை விரைவாக வழங்க வேண்டுமென எம்எல்ஏ, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

கடையநல்லூா் நகராட்சியில் புதிய குடிநீா் இணைப்புகளை விரைவாக வழங்க வேண்டுமென எம்எல்ஏ, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

கடையநல்லூா் நகராட்சி ஆணையா் குமாா்சிங், பொறியாளா் முரளி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் முஹமது அபூபக்கா் எம்எல்ஏ தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பின்னா் எம்எல்ஏ கூறியது:

கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் சீராக குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். புதிய குடிநீா் இணைப்புகளை விரைவாக வழங்க வேண்டும். கால்வாய்களை தூா்வாரி, கரைகளை உயா்த்த வேண்டும். இக்பால் நகா் கொசவன்குன்றம் தெப்பத்தைச் சுற்றியுள்ள குப்பைத் தொட்டிகளை அகற்றி இணைப்பு சாலை அமைக்க வேண்டும். கல்வத்து நாயகம் தைக்காவை ஒட்டியுள்ள கழிவுநீா் ஓடையை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பொது மக்களின் அடிப்படை வசதிகளை விரைவாக செய்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.