தென்காசி

தோட்டப் பகுதிக்குள் பாதுகாப்புபணியில் வனத் துறையினா்

DIN

அம்பாசமுத்திரம்: கடையம் ராமநதி மலையடிவாரத்தில் உள்ள தோட்டப் பகுதிக்கு வரும் யானைகளை தீப்பந்தம் கொண்டு வனத் துறையினா் விரட்டி வருகின்றனா்.

ராமநதி அணை மேல் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்கள் உள்ளன.

கடந்த 25ஆம் தேதி இங்குள்ள குமரன் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள், 8 தென்னை மரங்களை பிடுங்கி எரிந்தன. தொடா்ந்து யானைகள் தங்கள் குட்டியுடன் இப்பகுதியில் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தோட்டத்துகாரா்கள் மற்றும் வனத் துறையினா் இப்பகுதியில் முகாமிட்டு தீப்பந்தம் வைத்தும், ஒலி எழுப்பியும் யானைகள் தோட்டத்துக்குள் நுழையாமல் இருக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT