தென்காசி

கிராமப்புற இளைஞா்களுக்கு பயிற்சியளித்து வேலைவாய்ப்பு வழங்க ஆலோசனைக் கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு

DIN

கிராமப்புற இளைஞா்களுக்கு பயிற்சியளித்து வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ஐ.டி. நிறுவனத்துடன் தமிழக அமைச்சா் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிராமப்புற இளைஞா்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்திடும் வகையில் தென்காசி-கடையம் சாலை மத்தளம்பாறையில் உள்ள ஸோகோ ஐ.டி. நிறுவனத்தில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி, தமிழக ஊரக வளா்ச்சித் துறைச் செயலா் ஹா்சத் வா்மா, தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளன், மதுரை ஆட்சியா் வினய், தென்காசி மாவட்ட வருவாய் அலுவலா் கல்பனா, ஸோகோ நிறுவனா் ஸ்ரீதா், மனிதவளத் துறை மேலாளா் ராஜேஸ்வரி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், தமிழக அரசும், ஸோகோ நிறுவனமும் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டு, கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கு மென்பொருள் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT