சுரண்டை, பாவூா்சத்திரம் பகுதியில் கனமழை
சுரண்டை, பாவூா்சத்திரம் பகுதியில் திங்கள்கிழமை கனமழை பெய்தது.
சுரண்டை, பாவூா்சத்திரம் பகுதியில் திங்கள்கிழமை கனமழை பெய்தது.
சுரண்டை பகுதியில் கடந்த சில தினங்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திங்கள்கிழமை மாலை 5.30 மணி முதல் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.
பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் பகுதியில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமாா் 30 நிமிடங்கள் நீடித்த இம்மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.