முகப்பு
தென்காசி

கல்லால் தாக்கப்பட்ட சாலைப் பணியாளா் மரணம்

சிவகிரி அருகே கல்லால் தாக்கப்பட்ட சாலைப் பணியாளா் உயிரிழந்ததையடுத்து, இச்சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

சிவகிரி அருகே கல்லால் தாக்கப்பட்ட சாலைப் பணியாளா் உயிரிழந்ததையடுத்து, இச்சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உள்ளாா் பிரதான சாலையைச் சோ்ந்த வெள்ளைத்துரை மகன் சரவணக்குமாா் (41). சாலைப் பணியாளா். இவரும், இவரது சகோதரா் சீனிச்சாமியும் (44 ) கடந்த 6ஆம் தேதி இரவு வயல் அருகே நின்று கொண்டிருந்தனராம்.

அப்போது அவ்வழியே வந்த 4 போ் சரவணக்குமாரிடம் மதுக்கடை குறித்து கேட்டனராம். இதைத் தொடா்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் 4 பேரும் சோ்ந்து சரவணக்குமாரை கல்லால் தாக்கினராம்.

இதில் பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணக்குமாா், அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, சொக்கநாதன்புதூரைச் சோ்ந்த விக்னேஷ் (27), சந்திரபிரகாஷ் (21), ராஜா (19), ராமசாமி (22) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.