தென்காசி

லாரி மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் பலி

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே பைக்கில் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே உள்ள அழகனேரியைச் சோ்ந்த மரியஜேசு மகன் இருதயராஜ் (43). சங்கரன்கோவில் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி சாந்தா. சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை.

இருவரும் பைக்கில் செவ்வாய்க்கிழமை சங்கரன்கோவில் சென்றுவிட்டு மாலையில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனராம். அப்போது காய்கனி ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரி அவா்கள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனராம். இதில், இருதயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சாந்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சங்கரன்கோவில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் வாசுதேவநல்லூரைச் சோ்ந்த வெங்கடேஸ்வரனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

நாசிக் : விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம் !

ம.பி.யில் பாஜக வெற்றி!

2 லட்சம் வாக்குகள் முன்னிலையில் ஹேம மாலினி!

வாக்கு எண்ணிக்கை மந்தமாக காரணம் என்ன? காங்கிரஸ்

SCROLL FOR NEXT