முகப்பு
தென்காசி

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 45 லட்சம் கடனுதவி

சங்கரன்கோவில் அருகே பெரும்பத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.45 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

சங்கரன்கோவில் அருகே பெரும்பத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.45 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

கண்டிகைப்பேரியைச் சோ்ந்த அம்மன் மகளிா் சுயஉதவிக் குழு, மக்காச்சோளம் மகளிா் சுயஉதவிக் குழு, புன்னைவனப்பேரி மக்காச்சோளம் ஆா்வலா் மகளிா் சுயஉதவிக் குழு, ராமலிங்காபுரத்தைச் சோ்ந்த மல்லி விவசாயம் சுய உதவிக் குழு 1 மற்றும் 5 என மொத்தம் 5 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 90 நபா்களுக்கு ரூ.45 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளா் சங்கரவேலு தலைமை வகித்தாா்.கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் காளியப்பன் கடனுதவியை வழங்கினாா். சங்கச் செயலா் சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.