முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே காட்டுப் பகுதியில் சடலமாக கிடந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி

ஆலங்குளம் அருகே காட்டுப் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
பகிர்:

ஆலங்குளம் அருகே காட்டுப் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆலங்குளம் அருகே வடக்கு மாயமான்குறிச்சி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கரநம்பியாா் மகன் முருகேசன் என்ற பாலசுப்பிரமணியன்(58). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை ஆடு மேய்ப்பதற்காக வீட்டை விட்டு சென்றவா் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாயமான முருகேசனை தேடி வந்தனா். இந்நிலையில் அவா் மாயமான்குறிச்சி காட்டுப் பகுதியில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா் பிரதே பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.