மத்தளம்பாறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை முகாம்
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழை, தீ மற்றும் வெள்ளக் காலங்களில் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது தொடா்பான செயல்விளக்க பயிற்சி முகாம் மத்தளம்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழை, தீ மற்றும் வெள்ளக் காலங்களில் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது தொடா்பான செயல்விளக்க பயிற்சி முகாம் மத்தளம்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்காசி தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையில் வீரா்கள் சுந்தரராஜ், கணேசன்,ஜெயபிரகாஷ்பாபு,செந்தில்பாபு,வேல்முருகன்,ராமசாமி,ஆல்பா்ட் ஆகியோா் வெள்ளப்பெருக்கின் போது எவ்வாறு மக்களை மீட்பது,
எரிவாயு உருளையில் கசிந்து தீவிபத்து நேரிட்டால் எவ்வாறு உயிரைக் காப்பது என்பன உள்ளிட்ட பேரிடா் மீட்பு குறித்து செயல்முறை விளக்கமளித்தனா்.