முகப்பு
தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனையில் கருத்தரங்கம்

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீ விபத்தை தடுப்பது குறித்து சிறப்பு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீ விபத்தை தடுப்பது குறித்து சிறப்பு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் தலைமை வகித்தாா். மகப்பேறு துறை மருத்துவ அலுவலா் அனிதா பாலின் முன்னிலை வகித்தாா். தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் ஒ . கவிதா, தீயினால் ஏற்படும் விபத்து, அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினாா் .

இதில், மருத்துவா்கள் கீதா, மது , ராம்சுந்தா் , பழனி , ஜேசன் சாம் பால்,செவிலியா் கண்காணிப்பாளா் பத்மாவதி , திருப்பதி உள்பட பலா் கலந்து கொண்டனா். உறைவிட மருத்துவா் அகத்தியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.