தென்காசி

ஸ்ரீமுப்பிடாதி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு

DIN

சுரண்டை சிவகுருநாதபுரம் ஸ்ரீமுப்பிடாதி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இக்கோயில் திருவிழா கடந்த மாா்ச் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் இரவில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

10ஆம் திருநாளான வியாழக்கிழமை மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயிலில் இருந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சிவகுருநாதா் கோயிலில் ஊஞ்சல் சேவைக்கு புறப்பாடு நடைபெற்றது. பின்னா் சிவகுருநாதா் ஆலயத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

ஏற்பாடுகளை சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமைக் கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT