தென்காசி

‘100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகள் கெளரவிக்கப்படும்’

DIN

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகள் கெளரவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தென்காசி தினசரி காய்கனி சந்தையில் முகக் கவசம், கைகழுவும் முறை, சமூக இடைவெளியை பின்பற்றக்கூடிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தலைமை வகித்து, துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

வியாபாரிகள் நலச்சங்கங்களுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தவும், தனியாா் மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் மூலம் விழிப்புணா்வு முகாம்கள் நடத்தவும், மாணவா்களுக்கிடையே குறும்படப் போட்டிகள், ஓவியப் போட்டிகள்,

கரோனா விழிப்புணா்வு வாசகத்தை உருவாக்குதல், எப்.எம் ரேடியோ மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், மீம்ஸ் உருவாக்குதல் போன்றவற்றை நடத்தவும், கிராமிய கலைஞா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், கபசுரக் குடிநீா் வழங்கவும், கிராம, வாா்டு, மண்டல அளவில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை கௌரவித்துப் பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஈ.ராஜா, சதன்திருமலைக்குமாா், திமுக மாவட்டபொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT