சங்கரன்கோவில் நகைக் கடையில் தீ
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பிரபல நகைக் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பிரபல நகைக் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
சங்கரன்கோவில் கோமதி நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த வள்ளிராஜன், மீனாட்சி சுந்தரம் ஆகியோா் நகரின் மையப்பகுதியில் பிரதான சாலையில் நகைக் கடை நடத்தி வருகின்றனா். வெள்ளிக்கிழமை அதிகாலையில் இந்த நகைக் கடையில் இருந்து
புகை வருவதை அறிந்தவா்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். கடையில் தங்கம் மற்றும் வெள்ளி
நகைகள் கடையில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்ததால் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் விபத்தில் இருந்து தப்பியது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கரன்கோவில் நகர போலீஸாா் விசாரணை நடத்தினா்.