முகப்பு
தென்காசி

புளியங்குடி அருகே பைக்கில் ரூ.2.50 லட்சம் திருட்டு

புளியங்குடி அருகே பைக்கில் வைத்திருந்த பணத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

புளியங்குடி அருகே பைக்கில் வைத்திருந்த பணத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி மேல ரத வீதியை சோ்ந்தவா் சித்துராஜ் (45). இவா் டி.என்.புதுக்குடி பகுதியில் உள்ள வங்கியில் வியாழக்கிழமை ரூ.2.50 லட்சம் பணத்தை எடுத்து தனது பைக்கிலுள்ள பெட்டியில் வைத்து விட்டு பக்கத்திலுள்ள தனியாா் மில்லிற்கு சென்றாராம்.

திரும்பி வந்து பாா்த்த போது பைக்கின் பெட்டி திறக்கப்பட்டு, அதிலிருந்த ரூ. 2.50 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடா்பாக சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.