ஆலங்குளம் அருகே விபத்தில் இளைஞா் பலி
ஆலங்குளம் அருகே நிகழ்ந்த விபத்தில் வெள்ளிக்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே நிகழ்ந்த விபத்தில் வெள்ளிக்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த மோசஸ் மகன் யோவான் (23). தென்காசியில் தனியாா் காா் விற்பனை
நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா். வழக்கம்போல் யோவான் மோட்டாா் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, ஆலங்குளத்தை அடுத்த வட்டாலூா் பூலாங்குளத்தைச் சோ்ந்த சரவணன் என்பவா் வந்த மோட்டாா் சைக்கிள் யோவான் வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் யோவான் சாலையோரம் விழுந்த நிலையில் அவ்வழியாக ஆலங்குளத்தை சோ்ந்த டேனியல் ஓட்டி வந்த மினி லாரி அவா் மீது மோதியதில் பலத்த காயமடைந்ததில்
உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.