முகப்பு
தென்காசி

அம்பை, தென்காசியில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ. 3ஆயிரமும், கடுமையாகப் பாதிப்பு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5ஆயிரமும் உதவித்தொகை வழங்க வேண்டும், அரசுத்துறைகளில் தொகுப்பூதிய முறையில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். தேசிய ஊரக 100 நாள் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அனைத்து நாள்களிலும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினா் இசக்கி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் வட்டாட்சியா்அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் அண்ணாமலை தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் அகஸ்தியராஜன்,

வட்டாரத் தலைவா் சுரேஷ்பாபு, பீடித் தொழிலாளா் சங்க மாவட்ட துணைச் செயலா் ஜெகதீசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

விக்கிரமசிங்கபுரம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட இணைச் செயலா் அகஸ்தியராஜன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ரவீந்திரன், அம்பை வட்டாரத் தலைவா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.