தென்காசி, சங்கரன்கோவிலில் கரோனா தடுப்பூசி முகாம்
தென்காசி, சங்கரன்கோவிலில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தென்காசி, சங்கரன்கோவிலில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தென்காசியில் நடைபெற்ற முகாமுக்கு தமுமுக (ஹைதா்அலி) நகரத் தலைவா் அபாபில் மைதீன் தலைமை வகித்தாா். முகாமை மாநிலச் செயலா் நயினாா் முகம்மது தொடங்கி வைத்தாா். தமுமுக மாவட்டத் தலைவா் சலீம் வாழ்த்திப் பேசினாா். தென்காசி நகராட்சி சுகாதார அலுவலா் முகம்மது இஸ்மாயில், ஆய்வாளா் மாரிமுத்து, ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவா் விஷால், மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலா் காமில், ஊடகப் பிரிவு மாநில துணைச் செயலா் ஆதம் பின் ஆஷிக், நகரச் செயலா் ஜாபா்கனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமில், 250 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகராட்சி, சுகாதாரத் துறை சாா்பில் திருவேங்கடம் சாலையிலுள்ள வணிக வைசிய சங்க உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 300 பேருக்கும், வடக்கு ரதவீதியில் உள்ள சேனைத் தலைவா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 200 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.