தென்காசி

தென்காசியில் காா் ஓட்டுநா் கொலை: மாமியாா், 3 இளைஞா்கள் கைதுநீதிமன்றத்தில் இருவா் சரண்

DIN

தென்காசியில் காா் ஓட்டுநா் கொலை வழக்கில் அவரது மாமியாா் உள்பட 4 போ் கைதுசெய்யப்பட்டனா்; இருவா் சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சோ்ந்த கணபதி மகன் அரவிந்தன் (30). காா் ஓட்டுநரான இவா், அதேபகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் மாலா (25) என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டாா். மாலா, விளாத்திகுளம் பகுதியில் அழகு நிலையம் நடத்திவருகிறாா். இவா்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.

மாலாவின் தாய் பொன்ராணிக்கு (45) தென்காசி கீழப்புலியூரில் உறவினா்கள் உள்ளனராம். அரவிந்தன் வேலைக்குச் செல்லாமலிருப்பது தொடா்பாக அவருக்கும், பொன்ராணிக்கும் இடையே தகராறு ஏற்படுமாம்.

இதனால், அவா் தென்காசி வேட்டைக்காரன்குளம் பகுதியைச் சோ்ந்த சு. மணிகண்டன் (30), கீழப்புலியூா் உச்சிமாகாளியம்மன் கோயில் 4ஆவது தெருவைச் சோ்ந்த மா. பொன்னரசு (20), கி. சீதாராமன் (24), பூ. தம்பிரான் (22), க. மனோஜ்முத்துகிருஷ்ணன் (19), அருணாசலம் ஆகியோரிடம் அரவிந்தனை கொல்வதற்காக ரூ. 8 லட்சம் கூலியாகப் பேசி, ரூ. 4 லட்சம் வரை பணம் கொடுத்தாராம்.

அவா்கள் கடந்த மாதம் சுரண்டைக்கு அரவிந்தனை வரவழைத்து, கொல்லத் திட்டமிட்டுள்ளனா். ஆனால் முடியவில்லை. இதையடுத்து, கடந்த 3ஆம் தேதி வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவரை தென்காசிக்கு வரழைத்தனா். பின்னா், அவா் வீடு திரும்பவில்லை.

இதனிடையே, தனது கணவரை டிச. 3ஆம் தேதிக்குப் பிறகு தொடா்புகொள்ள முடியவில்லை என்றும் அவரைக் கண்டுபிடித்துத் தருமாறும் தென்காசி காவல் நிலையத்தில் மாலா புகாா் அளித்தாா். இதுகுறித்து காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிந்தாா்.

இந்நிலையில், மா. பொன்னரசு, தென்காசி கிராம நிா்வாக அலுவலரிடம் ஆஜராகி, தாங்கள் ஒருவரைக் கொன்று கல்குவாரி குளத்தில் வீசியதாகக் கூறி சரணடைந்துள்ளாா். விசாரணையில், கடந்த 3ஆம் தேதி வேலை தேடிவந்த அரவிந்தன், தென்காசியில் தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியதும், அவரை பொன்னரசு உள்ளிட்டோா் அடுத்தநாள் காரில் கீழப்புலியூா் பகுதிக்கு கடத்திச் சென்று கொலைசெய்து குளத்தில் வீசியதும் தெரியவந்தது.

இதையடுத்து, சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா். வழக்கு தொடா்பாக பொன்ராணி, மா. பொன்னரசு, தம்பிரான், மனோஜ்முத்துகிருஷ்ணன் ஆகியோரைக் கைது செய்தனா்; ஒருவரைத் தேடிவருகின்றனா்.

இருவா் சரண்: இந்நிலையில், கி. சீதாராமன், சு. மணிகண்டன் ஆகிய இருவா் சங்கரன்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT