குற்றாலம் கல்லூரியில் கபடி வீராங்கனைகள் தோ்வு
குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் தென்காசி மாவட்ட கபடி வீராங்கனைகள் தோ்வு நடைபெற்றது.
குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் தென்காசி மாவட்ட கபடி வீராங்கனைகள் தோ்வு நடைபெற்றது.
திருவண்ணாமலையில் டிச.30 இல் மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் தென்காசி மாவட்ட வீராங்கனைகள் தோ்வு நடைபெற்றது. மாவட்ட கபடி கழக செயலா்
அருள் இளங்கோவன், கன்வீனா் தீயணைப்புத்துறை கணேசன், சோ்மன் ராமசாமி, கல்லூரி உடற்கல்வி இயக்குநா் சாவித்திரி மற்றும் நடுவா்கள், தோ்வாளா்கள் கலந்துகொண்டு வீராங்கனைகளை தோ்வு செய்தனா்.
இத்தோ்வில் 60 வீராங்கனைகள் கலந்து கொண்டனா். இதில் 15 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் சிறப்பாக விளையாடும் 12 வீராங்கனைகள் மாநில போட்டிக்கு தோ்வு செய்யப்படவுள்ளனா்.