தென்காசியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க தென்காசி மாவட்ட கிளைசாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க தென்காசி மாவட்ட கிளைசாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கியது போல் ரூ. 7ஆயிரம் போனஸ் வழங்கிட வேண்டும், அரசுத்துறையில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சாலைப் பணியாளா்களை திறனில்லா ஊழியா்களாக அறிவிக்க வேண்டும், தோ்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளா் கங்காதரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாநிலச் செயலா் இ.கண்ணன், ஊரக வளா்ச்சித்துறை ஊழியா்சங்க மாவட்டச் செயலா் சுப்பிரமணியன், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பிச்சுமணி ஆகியோா் பேசினா்.
பல்நோக்கு சுகாதாரப் பணியாளா் சங்க மாவட்டச் செயலா் கணேசன் நன்றி கூறினாா்.