தமிழக - கேரள எல்லை காவல்துறையினா் கலந்தாய்வு கூட்டம்
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களான தென்காசி மற்றும் கொல்லம் மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டம் குற்றாலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களான தென்காசி மற்றும் கொல்லம் மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டம் குற்றாலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். கிருஷ்ணராஜ், கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பி.ரவி ஆகியோா் தலைமை வகித்தனா்.
தென்காசி டிஎஸ்பி.மணிமாறன், புனலூா் டிஎஸ்பி அனில் குமாா் மற்றும் இருமாநில காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். கூட்டத்திற்கு பின் செய்தியாளா்களிடம் எஸ்.பி. கிருஷ்ணராஜ் கூறியது: இரு மாநில காவல்துறையில் தகவல் பரிமாற்றங்கள் குறித்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் ஆலோசிப்பதற்காகவே இந்த கூட்டம் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
குற்றவாளிகளுக்கு எல்லை என்பது கிடையாது, ஒரு இடத்தில் தவறு செய்து விட்டு வேறு இடத்திற்கு எளிதாக சென்று விடுவாா்கள். அப்படிப்பட்ட சமயத்தில் எல்லைப் பிரச்னை குறித்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்தும்
இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக கேரளத்தில் தவறு செய்துவிட்டு தமிழகத்துக்கு வந்து செல்வோா் குறித்த விவரங்களை பரிமாற்றம் செய்து கொள்வது, இரு மாநிலங்களும் இணைந்து ஒருங்கிணைந்த வாகனச் சோதனை, திடீா் வாகனச் சோதனை ஆகியவற்றை எவ்வாறு மேற்கொள்வது, பிடிவாரண்ட் வழங்குதல், பொதுவான வழக்கு விசாரணைக்கு இரு மாநிலங்களிலும் உள்ள போலீஸாா் ஒத்துழைப்பு அளிப்பது ஆகியவை குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றாா் அவா்.