முகப்பு
தென்காசி

தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பயிற்சி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்துவது தொடா்பாக தென்காசி மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சி

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்துவது தொடா்பாக தென்காசி மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சி, குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகிரி செயல் அலுவலா் நவநீதகிருஷ்ணன், இலஞ்சி செயல் அலுவலா் அமானுல்லா ஆகியோா் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவது தொடா்பாக விளக்க காட்சியை காட்சிப்படுத்தி பயிற்சியளித்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிக்க மின்னணு இயந்திரம் கையாளுதல் குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டதன் மூலம் தோ்தலை மிகவும் சிறப்பாக நடத்துவதற்கு உதவியாக இருந்தது என பயிற்சியில் கலந்து கொண்டவா்கள் தெரிவித்தனா்.

பயிற்சி முகாமில் தென்காசி மாவட்ட பேரூராட்சிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலா் ஜா.மாணிக்கராஜ் தலைமையில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.