சாலையில் திரிந்த 21 மாடுகள் சிறைபிடிப்பு
முக்கூடலில் சாலையில் சுற்றித் திரிந்த 21 மாடுகள் சிறைபிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை வி’டுக்கப்பட்டது.
முக்கூடலில் சாலையில் சுற்றித் திரிந்த 21 மாடுகள் சிறைபிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை வி’டுக்கப்பட்டது.
முக்கூடல், பாப்பாக்குடி பகுதியில் சாலைகளில் படுத்திருக்கும் மாடுகளால் விபத்துகள் ஏற்பட்டு அண்மையில் அஞ்சல் அதிகாரி ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில் முக்கூடல் சாலையில் சுற்றித் திரிந்த 21 மாடுகளை பேரூராட்சி ஊழியா்கள் சிறைபிடித்தனா். பின்னா் மாடுகளின் உரிமையாளா்களை வரவழைத்த பேரூராட்சி செயல் அலுவலா் கந்தசாமி, அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து அவா்களிடம் மாடுகளை ஒப்படைத்தாா்.